Sunday, November 24, 2013

சச்சினை விட பாரத ரத்னாவுக்கு ஏற்றவர் விஷி ஆனந்த் - ஏன்? எனது Deccan Chronicle கட்டுரை

இது குறித்து நான் டெக்கான் குரோனிகள் நாளிதழில் எழுதியது இதோ.

It's high time Anand awarded the Bharat Ratna - கட்டுரையின் உரல்


7 மறுமொழிகள்:

said...

writerpara@gmail.com: Padithen. Super

வவ்வால் said...

எ.அ.பாலா,

பெரியாளு தான் சார் நீங்க!

ஆனால் இந்த கட்டுரையில் எனக்கு உடன் பாடில்லை, நீங்க பட்டியலிட்ட சாதனைகள், அரசு எந்திரத்துக்கு தெரியாத சமாச்சாரமா என்ன? விருதெல்லாம் வேறு அடிப்படையில் வழங்கப்படுவது.

பாரதரத்னா அவசியம் வழங்கப்பட வேண்டி நபரா விசுவநாதன் ஆனந்த்? எனக்கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன், அவ்வரோட விளையாட்டுக்கு நாட்டுக்கும் நாட்டுக்கும் சம்பந்தமேயில்லை, பியூர்லி பனத்துக்கா மட்டுமே அவர் ஆடிக்கிட்டு இருக்கார் , அதனால் தான் வெளிநாட்டுல போய் உட்கார்ந்ததே, எங்கே இந்தியாவில் நடக்கிற ஒரு டோர்னமெண்டில கலந்துக்க சொல்லுங்க பார்ப்போம்? இப்போ இந்த உலக சேம்பியன்ஷிப் கூட இங்கே ஸ்பான்சர் நடத்த முன்வந்ததால் தான் கலந்துக்கிட்டார், இல்லைனா இந்தியா பக்கமே வந்திருக்க மாட்டார் அவ்வ்.

ஆனால் சச்சினுக்கே வழங்கியாச்சு அப்புறம் என்ன என்ற அடிப்படையில் பார்த்தால் கொடுத்துட்டு போயிடலாம் அவ்வ்.

உங்களுக்கு எந்த அளவுக்கு செஸ் விளையாட்டுப்பத்தி தெரியும்னு எனக்கு தெரியலை, ( செஸ் விளையாடி இருப்பீங்கனு நினைக்கிறேன் ,ஆனால் அமைப்பு எப்படி இயங்குதுனு புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன்)ஆனால் உங்க கட்டுரை அடிப்படையில் பார்த்தால் சரியா புரிஞ்சுக்கலையோனு தான் தோனுது.

கிரிக்கெட் எப்படி ஒரு தனிப்பட்ட ஒரு போர்டின் விளையாட்டோ செஸ்சும் அப்படியே தான், கிரிக்கெட்டுக்கே கொடுத்தாச்சு ,அப்புறம் என்ன என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் வேண்டுமானால் ஆனந்துக்கு விருது கொடுக்க சொல்லிக்கேட்கலாம்.

கிரிக்கெட் ,செஸ்ல எல்லாம் உலக சேம்பியன் என சொல்லப்படுவதெல்லாம் " பேச்சுக்கு" தான் அதுக்கெல்லாம் எந்த வரையறையும் இல்லை. கொஞ்ச நாள் முன்னர் "காரி காஸ்பரோவ்" தனியா ஒரு அமைப்பு ஆரம்பிச்சு இதுல கலந்துக்கொண்டு வெற்றிப்பெறுகின்றவர் தான் உலக சேம்பியன் ,ஃபிஃடே நடத்துறது உலக சேம்பியன்ஷிப்பே இல்லைனு சொல்லிட்டார், உங்க கிட்டே காசு அதிகம் இருந்தா ஒரு உலக சேம்பியன் ஷிப் நடத்தி ,அதில் ஜெயிக்கிறவங்க தான் சேம்பியன் எனவும் அறிவித்து விடலாம் :-))

இந்தியாவை பொறுத்தவரையில் செஸ் ஃபெடரேஷனுக்கும் அரசுக்கும் சம்பந்தமேயில்லை , உலக அளவிலும் பெரும்பாலும் அப்படித்தான். ஃபிடே என்ற தனியார் அமைப்பு நடத்துற போட்டியில் வென்றவர் ,இது ஃபிடே உலக சேம்பியன் ஷிப் போட்டி அவ்ளோ தான்!அதுக்காக பாரதரத்னா கொடுக்கனும் என்பதற்கு எல்லாம் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது, ஆனால் கிரிக்கெட்டுக்கு கொடுத்தாச்சு அப்புறம் என்ன,எல்லாருக்கும் சுண்டல் கொடுக்கிறாப்போல ஆளுக்கு ஒரு பாரதரத்னாக்கூட கொடுக்கலாம் தப்பேயில்லை அவ்வ்!

முதலிலேயே உங்க பதிவை படிச்ச்ட்டேன், வழக்கம் போல நான் எதாவது சொல்ல , தப்பா எடுத்துக்கிட்டா என்ன செய்றதுனு போயிட்டேன், அப்புறம் ஹி...ஹி இதெல்லாம் சகஜமப்பானு , கருத்த சொல்ல வந்துட்டேன் அவ்வ்.

enRenRum-anbudan.BALA said...

//பாரதரத்னா அவசியம் வழங்கப்பட வேண்டி நபரா விசுவநாதன் ஆனந்த்? எனக்கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன், அவ்வரோட விளையாட்டுக்கு நாட்டுக்கும் நாட்டுக்கும் சம்பந்தமேயில்லை, பியூர்லி பனத்துக்கா மட்டுமே அவர் ஆடிக்கிட்டு இருக்கார் , அதனால் தான் வெளிநாட்டுல போய் உட்கார்ந்ததே, எங்கே இந்தியாவில் நடக்கிற ஒரு டோர்னமெண்டில கலந்துக்க சொல்லுங்க பார்ப்போம்? இப்போ இந்த உலக சேம்பியன்ஷிப் கூட இங்கே ஸ்பான்சர் நடத்த முன்வந்ததால் தான் கலந்துக்கிட்டார், இல்லைனா இந்தியா பக்கமே வந்திருக்க மாட்டார் அவ்வ்.
//
இந்தியாவில் ஆடாதது ஒரு விவாதப்புள்ளியே கிடையாது. இங்கு ஒரு பெரிய டொர்னமெண்டும் நடப்பதில்லை. இந்தியாவில் செஸ் புரட்சி ஏற்பட்டதற்கு, ஆனந்த் மட்டுமே காரணம் என்றால் அது மிகையும் இல்லை. இதுவே ஒரு பெரிய சாதனை தான், கிரிக்கெட் போல ஒரு பாப்புலர் இல்லாத ஒரு விளையாட்டில்!!!

சச்சின் சம்பாதித்தது போல அத்தனை பணமும் செஸ்ஸில் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், பணம் சம்பாதிக்கத் தான் எல்லா ஸ்போர்ஸ்மென்களும் உயிரைக் கொடுத்து விளையாடுகின்றனர் என்பது தான் யதார்த்தம். விளையாட்டுத்துறைக்கு பாரத ரத்னாவே கூடாது என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். கொடுக்கலாம் என்று சொன்னால், ஆனந்துக்குத் தான் முதலில் கொடுத்திருக்க வேண்டும். அதுவே என் கருத்து.

//விருதெல்லாம் வேறு அடிப்படையில் வழங்கப்படுவது. //
அரசியல் / பாப்புலரிட்டி என்றால், வாதிக்க எதுவும் இல்லை.

//( செஸ் விளையாடி இருப்பீங்கனு நினைக்கிறேன் ,ஆனால் அமைப்பு எப்படி இயங்குதுனு புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன்)ஆனால் உங்க கட்டுரை அடிப்படையில் பார்த்தால் சரியா புரிஞ்சுக்கலையோனு தான் தோனுது.
//
நிறைய விளையாடியிருக்கிறேன். செஸ் அமைப்பு, அதில் ஏற்பட்ட குழப்பம் அனைத்தும் தெரியும். அதற்கும் ஆனந்த் பாரத ரத்னாவுக்கு ஏற்றவர் என்று வாதிடுவதற்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனந்த, 120 நாடுகள் ஆடும், கடுமையான போட்டி நிலவும், ஒரு உண்மையான சர்வதேச விளையாட்டில் (கிரிக்கெட் போல 8 நாடுகள் ஆடும் விளையாட்டு அல்ல) மகத்தான ”தனிமனித” சாதனைகள் புரிந்தவர் என்பது தான் பிரதானமான பாயிண்ட்.

//கிரிக்கெட் ,செஸ்ல எல்லாம் உலக சேம்பியன் என சொல்லப்படுவதெல்லாம் " பேச்சுக்கு" தான் அதுக்கெல்லாம் எந்த வரையறையும் இல்லை. கொஞ்ச நாள் முன்னர் "காரி காஸ்பரோவ்" தனியா ஒரு அமைப்பு ஆரம்பிச்சு இதுல கலந்துக்கொண்டு வெற்றிப்பெறுகின்றவர் தான் உலக சேம்பியன் ,ஃபிஃடே நடத்துறது உலக சேம்பியன்ஷிப்பே இல்லைனு சொல்லிட்டார், உங்க கிட்டே காசு அதிகம் இருந்தா ஒரு உலக சேம்பியன் ஷிப் நடத்தி ,அதில் ஜெயிக்கிறவங்க தான் சேம்பியன் எனவும் அறிவித்து விடலாம் :-))
//
இது மிகவும் அதீதமான ஒரு பார்வை. கேஸ்பரோவ் நடுவில் ஒரு குழப்பம் பண்ணினார் என்பதால், ஆனந்த் உலக சேம்பியனே இல்லை என்றால், என்ன சொல்வது?!? டாப் செஸ் ஆட்டக்காரர்கள் பங்கு பெறும் candidates tournament வாயிலாக, challenger தேர்ந்தெடுக்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனந்த் ஒருவர் தான், நாக்-அவுட் (2000), ரவுண்ட் ராபின் (2007), மேட்ச் ஆட்டம் (2008,2020,2012) என்ற 3 வகைகளிலும் உலக சேம்பியன் பட்டம் வென்ற ஒரே செஸ் ஆட்டக்காரர். இது ஒரு பெரிய சாதனை தான்.

//ஆனால் கிரிக்கெட்டுக்கு கொடுத்தாச்சு அப்புறம் என்ன,எல்லாருக்கும் சுண்டல் கொடுக்கிறாப்போல ஆளுக்கு ஒரு பாரதரத்னாக்கூட கொடுக்கலாம் தப்பேயில்லை அவ்வ்!
//
சச்சினுக்கு கொடுத்ததை விட ஆனந்துக்கு கொடுத்திருந்தால், சுண்டலுக்கு பல மடங்கு வேல்யூ என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன். அவ்வ்!

பி.கு: நீங்களும் நான் சொன்னவற்றை தப்பாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை, இன்னொரு அவ்வ் :)

enRenRum-anbudan.BALA said...

வவ்வால்,

விட்டுப்போனது.

/அவ்வரோட விளையாட்டுக்கு நாட்டுக்கும் நாட்டுக்கும் சம்பந்தமேயில்லை, பியூர்லி பனத்துக்கா மட்டுமே அவர் ஆடிக்கிட்டு இருக்கார் , அதனால் தான் வெளிநாட்டுல போய் உட்கார்ந்ததே, எங்கே இந்தியாவில் நடக்கிற ஒரு டோர்னமெண்டில கலந்துக்க சொல்லுங்க பார்ப்போம்?
//
நெல்சன் மண்டேலாவுக்கும் “பாரத”வுக்கும் கூட தொடர்பு இல்லை. அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது! ஆனால், மண்டேலா சாதித்தது மிகப் பெரியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

சச்சினுக்கு இந்தியாவில் இருந்தபடி, துட்டு பண்ண முடிந்தது. செஸ் ஆனந்துக்கு அது முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ப்ளீஸ் :)

வவ்வால் said...


எ.அ.பாலா,

////விருதெல்லாம் வேறு அடிப்படையில் வழங்கப்படுவது. //
அரசியல் / பாப்புலரிட்டி என்றால், வாதிக்க எதுவும் இல்லை.//

அரசியல், அரசியல்வாதிகளின் கணக்கீட்டில் சொல்ல ஒரு சாக்கு பாப்புலாரிட்டி/ மக்களுக்கு பிடிச்சவர் :-))

//நிறைய விளையாடியிருக்கிறேன். செஸ் அமைப்பு, அதில் ஏற்பட்ட குழப்பம் அனைத்தும் தெரியும். அதற்கும் ஆனந்த் பாரத ரத்னாவுக்கு ஏற்றவர் என்று வாதிடுவதற்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனந்த, 120 நாடுகள் ஆடும், கடுமையான போட்டி நிலவும், ஒரு உண்மையான சர்வதேச விளையாட்டில் (கிரிக்கெட் போல 8 நாடுகள் ஆடும் விளையாட்டு அல்ல) மகத்தான ”தனிமனித” சாதனைகள் புரிந்தவர் என்பது தான் பிரதானமான பாயிண்ட். //

சச்சினே ஏற்றவர் இல்லைனு தான் நான் சொல்ல வரது,சச்சினுக்கே (8 நாடுகள் ஆடும் ஆட்டம்) கொடுத்தாச்சுனா , ஆனந்துக்கும் கொடுத்துட்டு போங்கனு தான் நானும் சொல்கிறேன்,ஆனால் நாட்டுக்காக "பாடுப்பட்டவர்கள்"னு ஜல்லியடிக்க தேவையில்லை என்பதே நான் சொல்ல வரது.

# //டாப் செஸ் ஆட்டக்காரர்கள் பங்கு பெறும் candidates tournament வாயிலாக, challenger தேர்ந்தெடுக்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனந்த் ஒருவர் தான், நாக்-அவுட் (2000), ரவுண்ட் ராபின் (2007), மேட்ச் ஆட்டம் (2008,2020,2012) என்ற 3 வகைகளிலும் உலக சேம்பியன் பட்டம் வென்ற ஒரே செஸ் ஆட்டக்காரர். இது ஒரு பெரிய சாதனை தான்.//

அப்படி வச்சி அதில் ஆனந்த் ஏன் கலந்துக்கொண்டு , வெற்றிப்பெறனும், அதுக்கு முன்ன அப்படி விதி இருந்துச்சா?

ஏற்கனவே சேம்பியனாக இருந்தவங்க சொல்லுற விதிக்கு தலையாட்டிய ஃபிடே வை எதிர்த்து குரல் கொடுத்து இருக்க வேண்டாமா?

கேஸ்பரோலாம் ஃபிடேவை மதிச்சதே இல்லை :-))

கேஸ்பரோவுக்கு ஸ்பான்சர் பிராபளம் ஆச்சு இல்லைனா இப்பவும் ரெண்டு சேம்பியன்ஷிப் டோர்னமெண்ட் நடந்திருக்கும் அவ்வ்.

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை நீங்க ஒரு டோர்ணமெண்ட் நடத்தி ,அதான் வேர்ல்ட் சேம்பியன்ஷிப்னு சொன்னா ஃபிடேலாம் ஒன்னுமே செய்ய முடியாது அவ்வ்!

# //நெல்சன் மண்டேலாவுக்கும் “பாரத”வுக்கும் கூட தொடர்பு இல்லை. அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது! //

அதே போல கொடுங்கனு சொல்லி கேட்டுக்கலாம்,நாட்டுக்காக" உழைத்தவர்னு "சொல்லிக்கிட்டு கேட்க வேணாமே அவ்வ்!

# //சச்சினுக்கு இந்தியாவில் இருந்தபடி, துட்டு பண்ண முடிந்தது. செஸ் ஆனந்துக்கு அது முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ப்ளீஸ் :)//

சச்சின் செய்த துட்டெல்லாம் "விளம்பர வருவாய் தான்" அவர் ஆடின ஆட்டத்துக்கு பிசிசிஐ கொடுக்கும் துட்டு ரொம்ப கொஞ்சமே.

ஆனால் ஆனந்த் ஆடும் ஆட்டத்துக்கு கிடைக்கும் துட்டு ,சச்சினின் ஆட்டத்துக்கு கிடைக்கும் துட்டு விட அதிகம் என்பது ஏன் மறந்து போச்சு?

மேலும் அப்பியரன்ஸ் ஃபீஸ் என ரேங்க் அடிப்படையில் ஒரு பெரிய தொகை, ஒவ்வொரு டோர்ணமென்டுக்கும் செஸ்சில் கொடுக்கப்படும்,அத்தொகை வெளியில் தெரிவிக்கப்படாது, அத்தொகை அதிகம் கொடுக்கும் போட்டிகளில் தான் பெரிய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துக்கொள்வார்கள்,அப்படி நிறைய வருமானம் செஸ்சில் உண்டு.

நீங்க பட்டியல் போட்ட பல வெளிநாட்டு போட்டிகளில் அப்பியரன்ஸ் ஃபீஸ்காக தான் ஆனந்த் கலந்துக்கொண்டார், வெற்றிப்பெற்றது ஒரு போனஸ் அவ்வ்!

கிரிக்கெட் வேர்ல்ட் கப் வின் செய்தாலும் தனி நபருக்கு என பணம் கிடைக்காது. பிரிச்சு கொடுப்பது தான், மேலும் டீம் பிரைஸ் மணி கூட கம்மி தான், ஜஸ்ட் கம்பேர் செய்து பார்க்கவும்.

# நாட்டின் பெயரில் சேம்பியன்ஷிப் கிடைக்க வாய்ப்புள்ள செஸ் ஒலிம்பியாட்டில் ஆனந்த் ஏன் ஆடுவதில்லை ?

அவரை விட அதிகம் ரேன்க் வைத்திருந்த போது கூட கார்ப்போவ் ரஷியாவுக்காக "ஒலிம்பியாடில் ஆடி இருக்கார்.

செஸ் பத்தி பேசுறதுனா இந்த எண்டில் இருந்து அந்த எண்ட் வரைக்கும் பேசுவேன், நீங்க ஒரு ரசிக மனப்பான்மையில் பேசுவதால் , நான் தர்க்க ரீதியாக பேசுவது " வெட்டிப்பேச்சாக" முடியும் என நினைக்கிறேன் அவ்வ்!

# நான் எப்பவும் தப்பா எடுத்துக்க மாட்டேன், ஆனால் மற்றவர்கள் தான் பொங்கிடுறாங்க என்பதால் சொல்லி வச்சேன்.

வவ்வால் said...

பாலா,

//இங்கு ஒரு பெரிய டொர்னமெண்டும் நடப்பதில்லை. இந்தியாவில் செஸ் புரட்சி ஏற்பட்டதற்கு, ஆனந்த் மட்டுமே காரணம் என்றால் அது மிகையும் இல்லை.//

இந்தியாவில் செஸ் புரட்சி ஏற்படுத்தினார்னு சொல்லுறிங்க அப்புறம் ஏன் பெரிய டோர்னமெண்ட் நடக்காம போச்சு :-))

இந்தியாவில் நடந்த டோர்னமெண்டில் ஆடித்தான் அவர் ஜி.எம் ஆனார்.

ஜி.எம் நார்ம் புரோசிஜர்ஸ் தெரியும்னு நினைக்கிறேன். இந்திய ஜி.எம் கள் பலரும், இந்திய போட்டிகளை தவிர்ப்பதையே வழக்கமாக வச்சிருக்காங்க, இதனால் போட்டியின் எலோ ரேட்டிங் கம்மியாகிடும்,இதனாலயே இந்திய டோர்ணமெண்டுகள் பெரிய டோர்ணமெண்டுகளாக கருதப்படுவதில்லை.

இந்தியாவில் கிரிக்கெட் புரட்சி ஏற்படக்கூட கபில் தேவ் தலைமையில் உலகக்கோப்பை வெற்றி தான் காரணம், ஆனால் அந்த டீம்ல இருந்த யாருக்கு பாரத்ரத்னா கொடுத்தாங்க :-))

said...

eppo tamilnadu sslc result sollunga ?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails